தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள் எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது விண்ணப்பதாரரின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் விதிகள் அரசாணைகள் தேர்வாணைய நடைமுறை விதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்படுகின்றன தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் தற்போது 30.01.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.
தமிழ் வழியில் கல்வி பயின்றோர் தமிழ் வழிக் கல்வி மூலம் படித்த நபர்களுக்கு மாநிலத்தின் கீழ் உள்ள பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும் திருத்தச்சட்டம் 2020-ன் பிரிவு 2(d)-ல் சொல்லப்படுவதாவது.
தமிழ் வழியில் படித்த நபர் என்றால் மாநிலத்தில் நேரடி நியமனத்தில் வாயிலாக நிரப்பப்படும் பதவிக்கான சிறப்பு விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட கல்வித்தகுதி வரை தமிழில் படித்தவராவார்.
தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான உரிமை கோரும் விண்ணப்பதாரர் அதற்கான சான்றாவணமாக நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை அனைத்து கல்வித்தகுதிகளின் படிப்புக்காலம் முழுவதும் தமிழ் வழியில் மட்டுமே பயின்றதற்கான பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு / மாற்றுச்சான்றிதழ் / தற்காலிகச்சான்றிதழ் / பட்டச் சான்றிதழ் / பட்டமேற்படிப்புச் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் / குழுமம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய / சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் நிர்ணயிக்கப்பட்ட கல்விதகுதி வரை அனைத்து கல்வித் தகுதிகளையும் தமிழ் வழியில் பயின்று உள்ளார் என்பதற்கு ஆதாரம் சான்றுகள் கட்டாயம் பதிவேற்றம் செய்ய / சமர்ப்பிக்க வேண்டும்.
உதாரணம் :
ஒரு பதவிக்கு பத்தாம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியாக இருப்பின் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஒரு பதவிக்கு பன்னிரண்டாம் வகுப்பு நினைக்கப்பட்ட கல்வித்தகுதியாக இருப்பின் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு கட்டாயம் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஒரு பதவிக்கு பட்டயப்படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியாக இருப்பின் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பு /பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, மற்றும் பட்டயப் படிப்பின் (அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைக்கு ஏற்றபடி) கட்டாயம் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஒரு பதவிக்கு பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியாக இருப்பின் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப் படிப்பின் கட்டாயம் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஒரு பதவிக்கு பட்டமேற்படிப்பு நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியாக இருப்பின் விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பினை கட்டாயம் தமிழ் வழியில் பயின்றிருக்க வேண்டும்.
தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சான்றாவணம் எதுவும் இல்லையெனில், கல்வி நிறுவனத்தின் பதிவாளர் /முதல்வர் / தலைமையாசிரியர் /தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் /இயக்குநரிடமிருந்து கீழே குறிப்பிட்ட படிவத்தில் நினைக்கப்பட்ட கல்வித்தகுதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி வரையிலான அனைத்து கல்வித் தகுதிகளையும் தமிழ் வழியில் பயின்று உள்ளார் என்பதற்கான ஆதாரம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தவறினால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
ஏதேனும் ஒரு பாடத்தை பகுதி நேரமாக படித்ததற்காகவோ ஏதேனும் தேர்வினை தனித்தேர்வாக எழுதியதற்காகவோ தனியர் தமிழ்வழிக் கல்வியில் பயின்றுள்ளார் என சான்றாவணம் ஏதேனும் பதிவேற்றம் செய்தால் /சமர்ப்பித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது மேலும் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
எனக்கு ஏன் பிஎஸ்சி அறிவித்துள்ளது.
TNPSC PSTM Certificate Download PDF
TNPSC PSTM Certificate and TNPSC PSTM Instructions Download
Key word : #TNPSCNewPSTMCertificateDownloadPDF, #TNSCPSTMCertificateNewPDFDownload, #TNSCPSTMCertificateFormat, TNSCPSTMCertificatePDF, TNSCPSTMEligibility, #PSTMCertificate2021, #TNPSCPSTM, #Information_in_tamil, #TNPSC, #tnpsc_instructions_2021, #tnpsc_instructions_tamil 2021
கருத்துரையிடுக
கருத்துரையிடுக